click on Kongu Vellalar Survey
Ezhudhingam
எழுதிங்கள்சீர்
கொங்கு
வெள்ளாளர் இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை
பெரியவளாகி ருதுவாவதற்கு முன் அப்பெண்ணிற்கு அவள் தகப்பன்-தாய் வீட்டீல்
செய்யும் சீர்தான் எழுதிங்கள்சீர். கொங்கு வெள்ளாளர் இனத்தில் இது ஒரு
திருமண நிகழ்ச்சி போல் நடைபெரும். திருமணம் போல அனைத்து சொந்தகாரர்களையும்
நேரில் சென்று அழைப்பர். குறித்த நல்ல நாளில் மாலை நல்ல நேரத்தில்
உறவினர்சூழ அருமைக்காரர் முகூர்த்தகால் நடுவார். பின்வரும் சடங்குகள்
எழுதிங்கள்சீர் பாட்டாக…
- கற்பு குலையாத காராள வம்சம்
- வேற்பு குலையாத வேளாளர் வம்சம்
- காப்பு குலையாத கவுண்டர்கள் வம்சம்
- காராள குலதிலகர் கவுண்டர்கள் வம்சம்
- கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் வம்சம்
- ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி
- பட்டி மரவு
- எலந்த மரம் குடை மரவு
- நுகம்
- கொலுவு
- குழவி லிங்கம்
- உரல் லிங்கம்
- அம்மி
- நிறைக்குடம்
- புடைச்சட்டி
- வாணைச்சட்டி
- பிறந்தான் பிறந்த மணைக்கு எழுதிங்கள்சீர் செய்ய பிறந்தாளை ஊரிலிருந்து அழைத்துவர
- புது துணி எடுத்து விரத விருந்து வைத்து
- வெள்ளைமாத்தில் எழுகுடம் வைக்க எழுதிங்கள்காரிகள் அருமைக்காரருடன் ஏழு கிணற்றிலிருந்து சீர்தண்ணீர் கொண்டு வந்து
- வெள்ளைமாத்தில் வைத்து, கங்கணம் கட்டி, மூன்று முறை அரிசி போட்டு கணபதி பூசை செய்து
- உரல், நுகம் அம்மி குழவி புடைச்சட்டி வாணைச்சட்டி பூசை செய்து
- பாலக்கால் வெட்டி வந்து முகூர்த்தகால் நட்டு
- வாசல் தொளித்து வண்ண கோலமிட்டு செம்மண் சுண்ணாம்பினால் சீராக கரைகட்டி
- எழுதிங்கள்காரிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து
- ஐந்துபடி திணை மாவில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து, இருகூராக்கி, இடையில் ஆச்சுவெல்லமிட்டு மாவால் நன்கு மூடி, ஆரச இலையிலிட்டு,
- மூன்று படி தண்ணீர் விடு, குறுக்கே குச்சி வைத்து, கோதை மாவை மூழ்காமல் புதுப் புடைச்சட்டில் வைத்து
- பிறந்தான் புடைச்சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து, கோதைமாவை வேகவிட
- எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, அரூமை பெரியவர் அருகுமணம் எடுக்க
- எழுதிங்கள்காரியை மரஉரல் முன் நிறுத்தி, எலந்தமுள் குடையை உடன்பிறந்தான் தான் பிடிக்க
- நல்ல நாவிதன் கொழுமுனையை காய்ச்சி, எழுதிங்கள்காரி முன்வைத்து சுட சுட மோர்விட
- எழுதிங்கள்காரி உரலை உதைத்து தள்ளி வீட்டினுள் சென்று அமர
- நங்கை கொழுந்தியாள் குழவிகல் எடுத்து வந்து எழுதிங்கள்காரியின் மடியிலிட
- எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, பட்டிமாவு பந்தலில் நுகத்தருகே ஒருசிந்திவிட (விரத விருந்து வைத்தல்)
- வீட்டு வாசல் நிலவுமேல் பேழை கூடையில் கோதைமாவை வைக்க, கோடாரியில் துணி சுற்றி அறுமை பெரியவருடன் சீர்காரி கோதையை பிளக்க, சீர் வெல்லம் குழையாமல் முழுதாக இருக்க நல்லதென்பார்.
- பின், சீர்காரி படி சாதம் பானையில் சமைத்து உறவினற்கு பரிமாறி, கோதை மாவுடன் ஒருசிந்திவிட்டு (விரத விருந்து வைத்தல்) கணபதி பூசை செய்து பெரியவரை வணங்கியதுடன் எழுதிங்கள் சீர் இனிதே முடிந்தது.
கொங்குவேள்ளாளர்களில் எழுதிங்கம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள்.