Wednesday, December 28, 2011

Sellan Kulam(செல்லன் குலம்)

 கொங்கு வெள்ளாள கவுண்டர்
of Sellan kootam and who are worshipping அழகுநாச்சியம்மன்
as their kulladeivam.

We have our origin at Hanumanpalli in Erode district where we have our Adi kulladeivam.

The sellan kootam pangalis are called ஏழுகரை pangalis.There are 7 sellan kuladeivam temples in kongunadu.6 pangalis belong to vellalagounder and
1 pangali belong to nattu gounder.All the 7 pangalis are born to the same parent.They migrated to various places in kongunadu and build kuladeivam temples.

The sellan kootam gounders are widely spread in the taluks of Erode,Karur,Tiruchengode,Salem,Rasipuram,Dhara
puram and other parts of kongunadu.

The alagunachi Amman temple is located at Paruthipalli village about 18kms from Tiruchengode,32kms from Salem and 21kms from Rasipuram.

Nanjai Edayar raja swamy is located at Edaiyar village about 2 kms from Paramathi velur &  22 kms from karur

 

 Mukasi Anumanpalli Chinnaman, Periyaman and God Vembarayar Temple.Family temple of Chellan Kulam Kongu Vellala Gounders....

Sellan( (செல்லங்குலம்,) --> (குலதெய்வம்: Selliyamman செல்லியம்மன், கொன்னையர்ர், எளச்சிபாளையம்.(திருச்செங்கோடு - ராசிபுரம் வழி) and Azhagunachi Amman, Anjur,Muthur), 

 

---

a madam is built by sellan kulathars.It is located exactly at the down entrance of the arthanareeswarar hill temple.The madam belongs to sellan kulam gounders of Paruthipalli,Iruppuli,Konnayar,Gokilai,Hanumanpalli,Elumathur and Nanjai edayar.

 1.Athayi ammam temple, (IRUPPUL)Iluppili , namakkal 

2. Rasaa swamy, Rasayi amman,Nanjai edayar ,namakkal

3. Alagu Nachiyamman Temple,Paruthipalli, namakkal

4. Periaya amman & Chinna  ammam temple,hanumanpalli erode

5. Pon Kaliamman ,Elumathur , erode

6. konKaliamman temple ,Gokilai

7. Selliamman temple ,Konnayar

---------------------------------------------------------------

 

 

தமிழ் நாகரித்தின் உயர் சின்னமாக விளங்கும் கொங்கு நாட்டின் காராள வம்ச வேளாளர்கள் தங்கள் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றைப் பேணிப் பாதுகாக்க காணி கண்டு குலம் வகுத்து குலதெய்வம் கொண்டு தங்கள் வகையறாக்களை கொங்கு பாரம்பரியத்தை சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தனர். நம் முன்னோர்கள் வகுத்த குலங்கள் மொத்தம் 160. அவற்றுள் பல குலங்கள் மறைந்து போயிற்று. தற்போது வாழும் குலங்களில் ஒன்று செல்லன் குலம். பல குலங்கள் இருந்தாலும், நான் பிறந்த செல்லன் குலத்தைப் பற்றிக் கூறுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

செல்லன் குலத்தார்கள் செல்லன் என்னும் மனிதரின் வழித்தோன்றல் ஆகும். கொங்குத் திருநாட்டில் அனுமன்பள்ளி என்னும் ஊரில் பிறந்தவர் செல்லன். அனுமதை என்றும் அனும நகர் என்றும் செல்லன் குலக் காணிப் பாடலில் கூறியிருப்பதை வைத்து அனுமன்பள்ளியே (அனுமதை) செல்லன் பிறந்த ஊர் என்று அறியப்படுகிறது. அவருக்கு ஏழு ஆண் மக்கள் பிறந்தனர். அந்த ஏழு மக்களில் அறுவர் வேறு இடங்களில் குடி பெயர்ந்தனர். அவ்வாறு குடி பெயர்ந்த ஊர்கள் பருத்திப்பள்ளி, கொன்னையாறு, இருப்புலி, கோக்கலை, எழுமாத்தூர் மற்றும் நஞ்சை இடையார். ஒருவர் அனுமன்பள்ளியிலேயே தங்கிவிட்டார்.

அவர்கள் குடி பெயர்ந்த இடங்களிலேயே குல தெய்வங்களுக்கு கோயில் கட்டி முன்னோர்களை முன்னிறுத்தி அவர்களைப் போற்றி இன்றளவும் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்து வருகின்றனர். செல்லன் குலத்தாரின் ஊர்களும் குலதெய்வங்களும் பின்வருமாறு:

அருள்மிகு அழகுநாச்சியம்மன் – பருத்திப்பள்ளி
அருள்மிகு அத்தாயியம்மன் – இருப்புலி
அருள்மிகு பெரிய அம்மன், சின்ன அம்மன் – அனுமன்பள்ளி
அருள்மிகு செல்லியம்மன் – கொன்னையாறு
அருள்மிகு கொன்காளியம்மன் - கோக்கலை
அருள்மிகு ராஜா சுவாமி, அருள்மிகு ராசாயி அம்மன் – நஞ்சை இடையார்
அருள்மிகு பொன்காளியம்மன் – எழுமாத்தூர்

இந்த ஏழு இடங்களில் தங்கள் வாழ்க்கையை நிலை நிறுத்தி ஒரு தாய் வயிற்றின் பிள்ளைகளாய் வளர்ந்து எட்டுத் திக்கிலும் பறந்து விரிந்து எங்கள் முதல் தெய்வமான செல்லனின் பெயர் சொல்லி எங்கள் வம்சத்தினை செல்லன் வழி வந்ததால் செல்லன் குலம் என்று அழைக்கின்றோம். ஏழு இடங்களில் எங்கள் முன்னோர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை ஊன்றியதால் எங்களை எழுகரைச் செல்லன் குலம் என்றும் வழங்குவதுண்டு.

என் முன்னோர்கள் முன்பொருமுறை, நோன்புக்காக ஒன்றுகூடிய போது, சில காரணங்களுக்காக தகராறு ஏற்பட்டன. அப்போது என் குலத்தார், “நாங்கள் எங்கள் மகளின் வீட்டிற்கு பொங்கல் சோற்றுக்கு வந்தோம்” என்று தந்திரமாகப் பேசி தப்பித்து விட்டனர். ஆகையினால் எங்களை “பொங்கசோத்தாமூடு” (பொங்கல் சோற்றான் வீடு) என்று கேலி செய்வதும் உண்டு.

நல்லம்மால் என்ற பெண் பல வருடங்களுக்கு முன் செல்லன் குலத்தில் பிறந்தவள். இவள் பிறந்த இடம் பரமத்தி வேலூர் நல்லியாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவள். இவளின் உடன் பிறந்தோர் மொத்தம் ஏழு ஆண் மக்கள். பெரியவளாகி திருமணம் ஆன பிறகு, கர்ப்பகாலத்தில் தனது பிறந்த வீட்டுக்கு வந்தவள், பிரசவ வலியால் மிகவும் வேதனைப்பட்டாள். தகவல் அறிந்த நல்லம்மாலின் கணவர் நம்மால் தான் அவள் மிகவும் அவதிப்படுகிறாள் என்று மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார். இது அறிந்த நல்லம்மால், தனது கணவன் இறந்த துயரம் தாங்காமல், உடன்கட்டை ஏறினாள். அப்போது, “செல்லன் குளத்தில் பிறப்பது ஆணாக இருந்தால் அரசு கட்டி ஆளட்டும். பெண்ணாகப் பிறந்தால் பிழைக்காமல் போகட்டும்” என்று சொல்லி இறந்து போனாள். இதன் சாபம் எங்கள் செல்லன் குலத்தைப் பாதிக்காமல் இருப்பதற்காக, செல்லன் குலத்தில் பெண் பிறந்தால், அதற்கு நல்லம்மால் என்று பெயர் வைத்து அதன் பின்னரே தங்கள் விருப்பப் பெயரை வைக்கும் மரபு எங்கள் ஊரில் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.

நல்லம்மால் பிறந்த இடத்தில் ஒரு பெரிய வேப்பமரம் உள்ளது. இன்றும் நாங்கள் அதற்கு பூஜை செய்து வழிபாடு செய்து வருகிறோம். எங்கள் குலம் என்றும் தலைசிறந்து விளங்க நல்லம்மாலின் அருள் எங்கள் குலமக்களை சீரோடும் சிறப்போடும் வாழ்விக்கிறது.

No comments:

Post a Comment