Kula Deivam: (i) Chelliamman (aka Selliyamman), Konnayur (aka Konnayar), Eluchipalayam, Tiruchengode to Rasipuram Road; (ii) Azhagunachi Amman, Anjur, Muthur; (iii) Periaya Amman and Chinna Ammam, Hanumanpalli (aka Anumanpalli), Erode; and (iv) Pon Kaliamman (pongiatha), Elumathur, Erode
குலதெய்வம்: (i) செல்லியம்மன், கொன்னையூர், எளச்சிபாளையம், திருசெங்கோடு- ராசிபுரம் ரோடு; (ii) அழகுனாச்சி அம்மன், அஞ்சூர், முத்தூர்; (iii) பெரியம்மன் சின்னம்மன், அனுமன்பள்ளி, ஈரோடு; (iv) பொன் காளியம்மன், எழுமாத்தூர், ஈரோடு
Sellan Kulam is called Ezhukarai Sellan Kulam after the 7 brothers who were leaders of this clan. It is said that once Muthali Kamindan, the eldest of the seven brothers, along with his troops went to Dharapuram in response to a request from the king Krishna Deva Raya to suppress dacoits and other trouble makers in that region. He won the battle and in honor to that Krishna Deva Raya gave Muthali Kaminadam the title to rule the Paruthipalli County. He built a temple in Paruthipalli and worshiped Alagu Naachi Amman as his kuladeivam. His followers were called Sellan Kulam Pangalis of Paruthipalli. Paruthipalli is located near Mallasamudram and Tiruchengode.
Sellan Kootam is one of the large Kongu Vellala Gounder Kulam widely spread in the area of Tirchengode, Tirupur, Nammakkal, Karur and Erode.
காணிப்பாடல் – 1
அஞ்சூர், அனுமன்பள்ளி, தலைநாடு, இடையாறை, தாராபுரம், ஈரோடு, இருப்புலி, பட்டிலூர், எழுமாத்தூர், கருங்கல்பாடி, வெஞ்சமாங்கூடல், கடம்பங்குறிச்சி, முட்டம், கொன்னையார், கச்சுப்பள்ளி, ஆனங்கூர், பருத்திப்பள்ளி, வண்டிநத்தம், குலவிளக்கு, அவிலூர், அறச்சலூர், வள்ளிஎறிச்சல், பவானி, வட்டூர், விளக்கேத்தி, ஆறுகொழு, கோக்கிளாய், மணப்பள்ளி, வெள்ளோடு ஆகிய ஊர்கள் செல்ல குலத்தார் காணியூர்களாகும்.
தண்டமிழ்க் கவிவாணர் புகழ்அஞ்சி அனுமாதை
தலையநாடு இடையாறையும்
தாரா புரத்துடன் ஈரோடு இலுப்பையும்
தருமமிகு பட்டிலூரும்
எண்டிசையில் எழுமாதை கருங்கல்லுப் பாடியும்
இயல்வெஞ்சை கடம்பம்முட்டம்
இன்பவழி கொன்னையார் கச்சுபளி ஆனங்கூர்
இனமிகும் பருத்திப்பள்ளி
வண்டிநத்தம் குலவிளக்கு அவிலூர் அறச்சலூர்
வள்ளிநகர் கூடுதுறையூர்
வட்டூர் விளக்கேத்தி ஆறுதொழு கோக்கிளாய்
மணப்பள்ளி வெள்ளோடையூர்
கொண்டதுரை யேகனக செல்லகுல மேருவே
கொற்றைஆனந்தன் உதவும்
கூறுமொழி பிசகாத சின்னய வசீரனே
குவலயம் புகழ்த்தாருவே!
காணிப்பாடல் – 2
செல்ல குலத்திற்கு வேறொரு காணிப்பாடல் உள்ளது. அதில் புகலூர், கருமனூர், கபிலை நகர் ஆகிய ஊர்களும் செல்ல குலத்தார் காணியூர்களாகக் கூறப்பட்டுள்ளன.
அஞ்சையூர் எழுமாதை தலையநாடு இடையாறை
அனுமநகர் தாராபுரம்
ஆறுதொழு ஈரோடு இருப்புலி வெள்ளோடு
அறச்சலூர் பட்டிலூரும்
வெஞ்சநகர் கச்சிபளி வண்டிநத் தங்குல
விளக்கொடு விளக்கேத்தியும்
வெற்புகலி யூர்கொன்னை யாறுடன் பருத்திப்பளி
வெண்கரும னூரினுடனே
செஞ்சொல்புகழ் வள்ளிநக ரும்வண் டுரைசெய்
சீர்மணப் பள்ளியுடனே
தேங்குபுகழ் கோக்கிளாய் இன்ஆனங் கூரதும்
சீரான கபிலைநகரும்
நஞ்சைதிகழ் கின்றகருங் கல்பாடி முட்டம்
நற்கடம் பங்குறிச்சி
நாட்டிலுயர் செல்லகுல மகராசர் காணியொடு
நானிலம் தனில்வாழ்கவே.
Lifestyle changes you should make in 30s
ReplyDeleteTobacco side effects on health
Benefits for skin and hair
Tips and tricks to enhance sleep health
Kid expenses that are not worth the money
Mistakes you should avoid to be millionaire
NEET Result 2017