Wednesday, December 19, 2012

பொன்னூஞ்சல் விழா

பெண் குழந்தைகளுக்கு பொன்னூஞ்சல் விழா. மார்கழித் திருவாதிரையை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கான பொன்னூஞ்சல் விழா, வேணாவுடையார் அரண்மனையில்(Sankarandampalayam, Dharapuram)
 மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். கொங்கு வேளாளர் இனத்தில் ஒரு பிரிவான பெரிய குல கோத்திரத்தாரின் பெண் குழந்தைகளை, பொன்னூஞ்சல் ஆட்டும் சீர் நிகழ்ச்சி தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது. 



சோழ மாமன்னர் இரண்டாவது கரிகாலர் தன் மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேரமன்னனை கருவூரில் அரியணை ஏற்றினார். கரிகாலனுக்கு படை உதவி செய்த பெரியகுல தலைவன் வேணாடருக்கு நன்றி தெரிவிக்க, தன் மகள் ஆடும் பொன் ஊஞ்சலை அளித்தார். அது முதல், மார்கழி திருவாதிரை நாளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொன்னூஞ்சல் விழா நடக்கிறது. 



தூரி:
தூரியை ஆசாரி வீட்டுக்குக் கொண்டு போய்த் தங்கத் தகடு அடித்துப் பூசை செய்து கொண்டு வந்து பின் நிலை பெறுத்துதல் செய்தல் வேண்டும். தூரியை ஏற்றுவதற்கு ஆசாரி பொங்கல் வைக்க வேண்டும். பொங்கலுக்கு ஆசாரிக்கு அரிசி கொடுப்பது வழக்கம் புண்ணியார்ச்சனை செய்த பின் தூரியாட்டுதல் நியதி. தூரி போடும் சமயம் எஜமானர் அவர்கள் சாமியார் புலவர் ஆகியோர் இருந்து நடத்துதல் வேண்டும். குலகுருவாகிய சாமியாரும் எஜமானரும் உறவின் முறையாரும் அமர்ந்திருக்கும் சமயம் புலவர்கள் பெரியநாயகியம்மன் ஊஞ்சல் பாட்டைப் பாடி ஆட்டுதல் நியதி தூரியில் அமருங் குழந்தைகள் நிமித்தம், புலவர்கள் ஊர் அழைக்கப் போதல் மரபு.
தூரிக்குக் கொடுக்க வேண்டிய சாமான்கள்:
தூரியில் அமரும் ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய கட்டணம் பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், மஞ்சள், பாக்கு, வெற்றிலை, காணிக்கை ஆகும். மேற்கூறிய சாமான்கள் கொண்டு வராதவர்கள் காணிக்கையுடன் செலுத்துதல் வேண்டும்.
தூரியில் அமருங் குழந்தைகளை மிராஸ்படி முறைப்படி, நடத்துதல் வேண்டும். உள்ளூர், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், வேலப்பம் பாளையம், ஆண்டிபாளையம் என்ற வரிசையில் குழந்தைகளைத் தூரியில் அமர்த்த அனுமதிக்க வேண்டும்.

முதற்பங்கு:
முதலில் அரண்மனைக் குழந்தைக்கு இடம் அளிப்பது சம்பிரதாயம் பின் உள்ளூர்ப்பங்கு தொடங்கப்பெறும் உள்ளூர்ப்பங்கில் உள்ளூர் ரங்கபாளையம் கோவில்பாளையம் கன்னங்கோவில், முதலிய ஊர்கள் அடங்கும்.

2-வது பங்கு:
புதுப்பாளையம் செ-புதூர், கவுண்டயன் வலசு, எருக்கலங் காட்டுப் புதூர் முதலிய ஊர்கள் அடங்கும்.

மூன்றாம் பங்கு:
குள்ளக் காளிபாளையம் - நான்காம் பங்கு:
வேலப்பம்பாளையம் எரிசனம்பாளையம் வெள்ளைக்கவுண்டன்புதூர் ராசிபாளையம் கருக்கம்பாளையம் கள்ளிமேடு ஆண்டிபாளையம், முதலிய ஊர்கள் அடங்கும் மற்றைய ஊர்க் குழந்தைகளை மாமூல் வழக்கம்படி வைத்து ஆட்டுதல் முறைமை.

-

EJAMANAR, ARANMANAI. PATTAKKARAR, THIRU.S.K.BALASUPRAMANIAM PERIYANNA VENAUDAIAR ,SANKARANDAMPALAYAM, DHARAPURAM , 


No comments:

Post a Comment