Thursday, December 27, 2012

Kongu Songs

1  .Kongu Mangala vazhthu song





2.  Kongu Vellala Gounder Song




3.  Kongu Nattu thangame song




4.  Kongu Nattu thangame song




5.  Sambha nathu song




Wednesday, December 19, 2012

பொன்னூஞ்சல் விழா

பெண் குழந்தைகளுக்கு பொன்னூஞ்சல் விழா. மார்கழித் திருவாதிரையை முன்னிட்டு, பெண் குழந்தைகளுக்கான பொன்னூஞ்சல் விழா, வேணாவுடையார் அரண்மனையில்(Sankarandampalayam, Dharapuram)
 மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். கொங்கு வேளாளர் இனத்தில் ஒரு பிரிவான பெரிய குல கோத்திரத்தாரின் பெண் குழந்தைகளை, பொன்னூஞ்சல் ஆட்டும் சீர் நிகழ்ச்சி தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ளது. 



சோழ மாமன்னர் இரண்டாவது கரிகாலர் தன் மருமகன் ஆட்டன் அத்தி என்ற சேரமன்னனை கருவூரில் அரியணை ஏற்றினார். கரிகாலனுக்கு படை உதவி செய்த பெரியகுல தலைவன் வேணாடருக்கு நன்றி தெரிவிக்க, தன் மகள் ஆடும் பொன் ஊஞ்சலை அளித்தார். அது முதல், மார்கழி திருவாதிரை நாளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பொன்னூஞ்சல் விழா நடக்கிறது. 



தூரி:
தூரியை ஆசாரி வீட்டுக்குக் கொண்டு போய்த் தங்கத் தகடு அடித்துப் பூசை செய்து கொண்டு வந்து பின் நிலை பெறுத்துதல் செய்தல் வேண்டும். தூரியை ஏற்றுவதற்கு ஆசாரி பொங்கல் வைக்க வேண்டும். பொங்கலுக்கு ஆசாரிக்கு அரிசி கொடுப்பது வழக்கம் புண்ணியார்ச்சனை செய்த பின் தூரியாட்டுதல் நியதி. தூரி போடும் சமயம் எஜமானர் அவர்கள் சாமியார் புலவர் ஆகியோர் இருந்து நடத்துதல் வேண்டும். குலகுருவாகிய சாமியாரும் எஜமானரும் உறவின் முறையாரும் அமர்ந்திருக்கும் சமயம் புலவர்கள் பெரியநாயகியம்மன் ஊஞ்சல் பாட்டைப் பாடி ஆட்டுதல் நியதி தூரியில் அமருங் குழந்தைகள் நிமித்தம், புலவர்கள் ஊர் அழைக்கப் போதல் மரபு.
தூரிக்குக் கொடுக்க வேண்டிய சாமான்கள்:
தூரியில் அமரும் ஒவ்வொரு குழந்தைக்கும் உரிய கட்டணம் பச்சரிசி, புழுங்கல் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், மஞ்சள், பாக்கு, வெற்றிலை, காணிக்கை ஆகும். மேற்கூறிய சாமான்கள் கொண்டு வராதவர்கள் காணிக்கையுடன் செலுத்துதல் வேண்டும்.
தூரியில் அமருங் குழந்தைகளை மிராஸ்படி முறைப்படி, நடத்துதல் வேண்டும். உள்ளூர், புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், வேலப்பம் பாளையம், ஆண்டிபாளையம் என்ற வரிசையில் குழந்தைகளைத் தூரியில் அமர்த்த அனுமதிக்க வேண்டும்.

முதற்பங்கு:
முதலில் அரண்மனைக் குழந்தைக்கு இடம் அளிப்பது சம்பிரதாயம் பின் உள்ளூர்ப்பங்கு தொடங்கப்பெறும் உள்ளூர்ப்பங்கில் உள்ளூர் ரங்கபாளையம் கோவில்பாளையம் கன்னங்கோவில், முதலிய ஊர்கள் அடங்கும்.

2-வது பங்கு:
புதுப்பாளையம் செ-புதூர், கவுண்டயன் வலசு, எருக்கலங் காட்டுப் புதூர் முதலிய ஊர்கள் அடங்கும்.

மூன்றாம் பங்கு:
குள்ளக் காளிபாளையம் - நான்காம் பங்கு:
வேலப்பம்பாளையம் எரிசனம்பாளையம் வெள்ளைக்கவுண்டன்புதூர் ராசிபாளையம் கருக்கம்பாளையம் கள்ளிமேடு ஆண்டிபாளையம், முதலிய ஊர்கள் அடங்கும் மற்றைய ஊர்க் குழந்தைகளை மாமூல் வழக்கம்படி வைத்து ஆட்டுதல் முறைமை.

-

EJAMANAR, ARANMANAI. PATTAKKARAR, THIRU.S.K.BALASUPRAMANIAM PERIYANNA VENAUDAIAR ,SANKARANDAMPALAYAM, DHARAPURAM , 


Thursday, December 13, 2012

Kongu Cuisine

Kongu Cuisine:  Basically it is a collection of recipes from all the different towns of this region over centuries .
Cuisine speciality:
  • Traditional way of cooking.
  • No marination of non vegetarian items.
  • Tumeric is always used [fresh or roased and ground].
  • Use of oil and chilli is less
  • Use of unpeeled potatoes use and milk in curries.
  • Use of coconut shells to cook meat gravies easily.  
  • Use  of "Coparai" (dry coconut) in curries and gravies rather than fresh coconut 
  • Use mangoes to prepare various sweets 
  • Cook delicacies using various cereals such as rye, bajra, jowar for their main course.
  • Consume butter milk and sweet as the second last course and rasam as the last.
First time in cooking: 
  • "Venpongal" and "Kottu" recipes to crop up.
  • Drumstick leaves used to make ghee from butter.
  • Concept of "Pickle Making" using gingelly oil was conceived here as sesame crop was cultivated in Arachalur, Erode and Nathakadaiyur.
  • 'Jasmine Idlis', which has a special character of regaining its shape and texture even when pressed
  • "Vadagams" prepared by drying meat . 
  • "Panchamirtham" : From the region of Kulithalai and Pollachi were the special type of bananas were grown known as "Viruppachi Vazhaipazham". This was developed in the temple kitchen, where expert chefs prepared a dish which speaks for itself. It contains viruppachi plantains, kandasari sugar, dates, kalkandu [sugar candy],cardamom and ghee.
  • "Kali" prepared from use pulses like maize, ragi, bajra was from the region of Karur, Kangeyam and Palladam.
  • Pathaneer Halwa / Payasam and Illaneer Halwa / Payasam took shape here.
Kongunad special : few recipe names:
  • Pollachi yeral masala and pollachi mutton kuzhambu.
  • Thandu keema urundai.
  • Karur mutton kuzhambhu.
  • Keeranoor mutton kuzhambhu [mutton + vegetables]
  • Karimeen kuzhambhu [ fish + mutton].
  • Pallipalayam kozhi varuval [chiken +pallipalayam special masala]
  • Nathakadaiyur nandu masala [crab masala].
  • Attakatti yeral masala.
  • Aathur kozhi kuzhambhu .
Vegetarian recipes:
  • Benian [speciality of muslim cuisine ]
  • Mushroom thirattal [mushroom + groundnut masala].
  • Ellu kara dosai. 
  • Ragi roti.
  • Pallapatti kathirikai masala.
  • Kathamba saadam.
  • Kuchi kizhangu avial.
  • Salavu kuzhambu [use of herbs like thithili]
  • Drumstick leaf adai.
  • Karur kaai kurma.
  • Pachapuli rasam [tamarind + onion].
  • Nila kuzhambhu.[curry prepared with potato, colocassia, yam and sweet potato]
  • Kollu masiyal [horsegram boiled and ground to a paste along with spices]
  • Payiru thirattal [whole moong dhal+groundnut paste +onion +pepper]
  • Kaalaan parangi kari.

Coimbatore in Kongu Region


Coimbatore is situated in the west of Tamil Nadu, bordering the state of Kerala. It is surrounded by the Western Ghats mountain range on the West and North, with reserve forests and the (Nilgiri Biosphere Reserve) on the northern side. The Noyyal River runs through Coimbatore and forms the southern boundary of the corporation

With more than 25,000 small, medium and large industries, the city's primary industries are engineering and textiles. Coimbatore is called the "Manchester of South India" due to its extensive textile industry, fed by the surrounding cotton fields.The district also houses the country's largest amount of hosiery and poultry industries[citation needed]. The city has two special economic zones (SEZ), the Coimbatore Hi-Tech Infrastructure (CHIL) SEZ and the Coimbatore TIDEL park, and at least five more SEZs are in the pipeline

Originally Coimbatore district  formed part of the Kongu country, the history of which dates back to the Sangam age. It is found that in early days the area was inhabited by the tribes, the most predominant among them being the Kosars who are reported to have had their headquaeters at Kosampathur  which probably later became the present Coimbatore.

However, tribal predominance did not last long as they were over-run by the Rashtra Kutas. From Rastrakutas the Region fell in to the hands of the cholas who were in prominence at the time of Raja Raja Chola. On the decline of Cholas the Kongun territory was occupied by the Chalukyas and then by the Pandyas and the cysalas.

Due to internal strife in the Pandyas Kingdom the Muslim rulers from Delhi happened to interfere. Thus the area fell into the hands of Madurai Sultanate from whom the Vijayanagar rulers wrestled for the region during 1377-78 after overthrowing the Madurai Nayaks.During the period of Muthu Veerappa Nayak and later during the period of Tirumal Nayak internal strife and intermittent wars ruined the kingdom.

As a  consequence during the period of Tirumal Nayak,the Kongu region fell into the hands of the Mysore rulers from whom hyder Ali took over the area. However, consequents on the fall of Tippu Sultan of Mysore in 1799, the Kongu  region came to be ceded to the East India Company by the Maharaja of mysore who was restored to power by the East India Company after defeating Tippu Sultan. From then till 1947 when India attained Independence, the region remained under British control who initiated systematic revenue administration.


In 1840, the areas were merged into one  and brought under one District Collector. During the time, Mr.H.S. GREAME, [I/C] from 20/10/1803 to 20/01/1805 was the Collector. In 1868, the Nilgiris District was bifurcated from the Coimbatore District. At the opening of the present century there were ten taluks in the district viz., Bhavani, Coimbatore, Dharapuram, Erode, Karur, Kollegal, Palladam, Pollachi, Sathyamangalam and Udumalaipettai. The name of Sathyamangalam taluk was subsequently changed as Gopichettipalaiyam.

Avinashi taluk was formed in the year Karur taluk happened to be transferred to Tiruchirappalli district. In 1927, some villages of Bhavani taluk together with a few village from Salem district were constituted into Mettur Area but very soon i.e, in 1929, this area was transferred to Salem district.

Again in the year 1956 considerable area of the district, viz., the whole of Kollegal taluk was transferred to Mysore State as part of the States Re-organisation Scheme. In 1975, Sathyamangalam sub-taluk was upgraded as a full fledged taluk.

Again in 1979, Perundurai sub-taluk of Erode and Mettupalayam sub-taluk of Avanashi were also upgraded into independent taluks.Thus the total number of taluks in the district came to twelve. This, however, did not last long. In the same year (1979) six taluks were bifurcated from the district to constitute a new district viz, Erode.

Under G.O. Ms. No. 1917 Revenue dt. 31-8-79, the following six taluks were bifurcated from then Coimbatore district to from Erode district. Bhavani, Gopichettipalayam, Sathyamangalam, Erode, Perundurai and Dharapuram. This bifurcation considerably reduced the size of the district. It has only nine taluks now, viz.  Pollachi, Coimbatore (North), Avanashi, Palladam, Udumalpettai, Tirupur, Valparai, Coimbatore (South) and Mettupalayam.

Tracing the History of Textile City - Rich legacy and promising future

Coimbatore is the third largest city in Tamilnadu, with a population of more than 15 lakhs. There are more than 30,000 tiny small, medium and large industries and textile mills. The city is known for its entrepreneurship of its residents. The Climate is comfortable round the year. The city is situated on the banks of the river Noyyal. Coimbatore existed even prior to the 2nd  Century AD as a small tribal village capital called Kongunad until it was brought under Chola control in the 2nd or 3rd Century AD by Karikalan, the first of the early Cholas.

When Kongunad fell to the British along with the reset of the state, its name  was changed to Coimbatore and it is by this name that is known today, except in Tamil, in which it is called Kovai. The rich black soil of the region has contributed to Coimbatore’s flourishing agriculture industry and, it is in fact, the successful growth of cotton has served as a foundation for the establishment of its famous textile industry.


There are more than 25,000 small, medium, large scale industries and textile mills. Coimbatore is also famous for the manufacture of motor pump sets and varied engineering goods, due to which it has earned the title “Detroit of the South”.
The Development of Hydroelectricity from the Pykara falls in the 1930s led to a cotton boom in Coimbatore.

The result has been a strong economy and a reputation as one of the greatest industrial cities in South India. According to ancient manuscripts, Coimbatore’s history can be traced to the Irula tribal chief Kovan and his clan who were it’s earliest settlers and the founders of “Kovanpatti” a part of Kongunadu. Years later, the surrounding forests were cleared, and the founder of “Kovanpatti” a part of kongunadu. Years later, the surrounding forests were cleared, and a new village was formed called “Kovanputhur”, which over the years came to be known as “Coimbatore”.

In spite of it’s prominence as a busting industrial city, Coimbatore still remains  one of the most pollution free cities in India. Covering an area of 23.5 square Kilometers, the city houses some of the biggest names in Indian Industry. The major industries include textiles, textile machinery, automobile spares,motors, electronics, steel and aluminium foundries. Tirupur – a neighbouring town has carves a niche for itself in the garments market. Agriculture however remains the major occupation.

The rich fertile soil and tropical climate is excellent for the growth of millet, paddy, cotton, tea, oil seeds and tobacco. The city is also known for it’s educational institutions. Coimbatore Agricultural University is renowned as one of the best colleges of it’s industrial and technological growth, traditions and age old customs are still held in high esteem. The temples bear witness to the religiousness and love of art and architecture of the people. There are also a number of places of tourist intrest around Coimbatore. Ootacamund (ooty for short), is one of the most popular tourist spots in India.

Friday, November 2, 2012

Lord Murugan Temple In Kongu region


1.Palani Arulmigu Dhandayuthapani Temple (Palani Murugan Temple)


The temple was constructed in the period of Chera Kings rule of South Kongu Nadu. In the epigraphs found in the Karpagraham dated 13th century it is known that Pandiyan Kings, Chola Kings also contibuted much for the festivals of this temple and worshiped Lord Muruga
At its foot is the Temple of Thiru-avinan-kudi, one of the Arupadaiveedu(he six Fort-Houses of Muruga).


2.Marudhamalai Murugan temple


Marudamalai is a popular temple of the Hindu god Murugan, situated top a hill of the same name in Coimbatore Tamil Nadu, India
Like most Murugan temples, Marudhamalai Murugan temple is situated upon a hill that is a part of the Western Ghats and is about 15 km west .
This is an ancient temple. References to this temple are found in inscriptions in the Thirumuruganpoondi temple. Thirumuruganpoondi temple is a "Tevarapaadalpetrastalam" and is at least 1200 years old. So we can surmise that the Marudhamalai temple is older than 1200 years.
There is a shrine called the "Paambaatti Sitthar Kugai" (Paambaatti Sitthar cave) that is in proximity to the Murugan temple. Legend has it that a Sitthar referred to as the Paambaatti Sitthar lived here in Marudhamalai. Paambaatti Sitthar is one of the most notable 18 Sitthars





3. Chennimalai Subramanya Swami Temple

The most famous temple of Lord Muruga in Erode District is Chennimala
This world famous temple of Lord Muruga is where Lord Arunagirinathar was blessed with "Padikasu", wealth of coins. This is where an unusual phenomenon, rather a miracle took place in the year 1984 on 12 February. A bullock cart with two bulls climbed the 1320 steps on their own on this eventful day. Saravana Munivar wrote the most popular Chennimalai Sthalapuranam before 700 years. Milk and curds are used as special offerings to Lord Muruga in Chennimalai and it is the general belief that curds do not become sour here.




4. Sivan Malai Sivanmalai Murugan Temple

A beautiful Temple dedicated to Lord Muruga near Kangaeyam. This lord is also known as Karthikeya, Skanda among other myraid names. He is the lord of war and victory. In mythology he is the son of Lord Shiva and Parvathi, but was born unconceived. The temple has the classic south indian (and Tamil) architecture.
ivanmalai is located in the Tiruppur District, Tamilnadu. It is 5 kms away from Kangeyam town towards Tiruppur. This Sivanmalai is located in 25 Kms away from Tiruppur and 76 Kms away from Coimbatore. The other names of Sivanmalai are Sivachalam, Sivathri, Shakthi Sivamalai. This town Kangeyam is famous for business coconut products like oil, nutshell charcoal products etc. The main deity of the Sivanmalai is Lord Subramanya Swamy it is the another name of Lord Murugan. The favorite deity of the Tamil people is undoubtedly Murugan, the son of Siva and Parvathi. This temple was build by Sivavakkiyar a famous Sidhhar. It is believed that this temple may be constructed in 12th century.



5.Thindal Murugan Temple

Thindalmalai Murugan Temple (திண்டல்மலை முருகன் கோவில்) is one of the famous Hindu temples dedidated to Lord Muruga, located on Thindalmalai hillock, in the city of Erode, off the Perundurai Road, the prestigious arterial Road off the City
he area surrounding this hill is called as Thindal. The part in the west side of this hillock is called Mael Thindal or Thindal medu and the eastern part is called Keel Thindal.



View Larger Map


6.  Arulmigu Balamurugan Temple, Pachaimalai,Gobichettipalayam

The temple is located in Gobichettipalayam, a quiet town in the Erode district.  Gobi, as it is
 shortly called, has two hill temples - Pachaimalai and Pavalamalai. This is considered to be
 a great reason to justify the town's ethics. Pachaimalai is also colloquially pronounced as
 'Pachamalai'
 Arulmigu Balamurugan, the child god, son of Shiva Parvathi, the god of army, the teacher of all,
 finds his place in this scenic hill temple. The Lord appears in a very beautiful form and it is very
 difficult to take one's eye off.




7.Arulmigu Murugan Temple, Pavalamalai, Gobichettipalayam, Erode

The second hill temple for Lord Muruga in Gobi.

8.Uthanda Velayudhasamy Thirukoil Uthiyur/Uthimalai , Kangeyam,Tirupur

The temple is located on a small hillock. This place is called Pon Uthiyur which is considered as a Sanjeevani Hill of the south.

9. Vattamalai Murugan Temple,Kumarapalaym, Tiruchengode Tamilnadu

10. Pugali Malai, Balasubramaniswamy Temple, Karur

11. BALA MALAI MURUGAN TEMPLE , Karur

12.Kabilar Malai Murugan Temple , Kabilar malai, paramathi ,Namakkal

13.Vaiyappamalai MURUGAN temple , Namakkal

14. Alagumalai Muthu Kumara Swamy Temple, Vanvanchery, Tiruppur

  The Temple of Lord Muruga named as Muthukumara Baladhadayuthapani here in Alagumalai, is the famous and ancient temple situated in the Kongu Region.

Tuesday, October 23, 2012

Seven Thevara Stalams (Lord Siva Worship Places) in Kongu Region


The sanctum of this temple bears depictions of the 7 Thevara temples in Kongu Naadu.( sivan temple )

1.Avinashi Temple, Avinashi,Thirupur
This temple is regarded as the first of the seven Thevara Stalams in the Kongu Region of Tamil Nadu


View Larger Map


2. Arthanareeswarar temple Tiruchengode
This temple is regarded as the second of the seven Thevara Stalams in the Kongu Region of Tamil Nadu



View Larger Map

3.Sangameswarar Temple ,Bhavani, Tamil Nadu
This temple is regarded as the 3rd of the 7 Thevara Stalams in the Kongu Region of Tamil Nadu



View Larger Map

4.Sri Kalyana Pasupathinathar Temple,Karur
This temple is regarded as the 4th of the 7 thevara Stalams in the Kongu Region of Tamil Nadu.
Karuvoor Aanilai as Lord Siva in this temple




View Larger Map


5.Tirumuruganathaswamy Temple, Tirumurugapoondi, Avinashi
This temple is regarded as the 5th of the 7 thevara Stalams in the Kongu Region of Tamil Nadu.  Lord siva as  Muruganathar  in this temple





View Larger Map

6. Arulmigu Magudeshwaar , Kodumudi,Erode(Tiruppandikodumudi)
This temple is regarded as the 6th of the 7 thevara Stalams in the Kongu Region of Tamil Nadu. Kodumudinathar as Lord Siva in this temple



View Larger Map


7. Vigirthanatheswarar,Venjamaakudal ,Aravakurichi(tk) ,Karur
This temple is regarded as the 7th of the 7 thevara Stalams in the Kongu Region of Tamil Nadu. Vikriteswarar as Lord Siva in this temple
The Sthala Teertham is Vigirtha teertham. With his pathigams, Saint Sundarar is said to have praised the lord.The temple is located on the east bank of river Kudaganaaru.This shivasthalam is more than 1200 years old


.
View Larger Map


Kangeyam In Kongu Region


Kangeyam (Tamilகாங்கேயம்) is a municipality in Tirupur district in the Indian state of Tamil Nadu. Kangeyam was the capital of Kongu Nadu for many centurie
There is no definite origin for the word Kongu, several scholars have given their views. The name Kongu Nadu is believed to have been gained from 'Kongadesam', "Konga" a derivant of the term "Ganga", meaning 'land of the Gangas' see Western Ganga Dynasty. Kangayam is the old capial of Kongu Nadu, (Sanskrit: Ganga+eyam = Gangeyam : seat of the Western Ganga Dynasty. Kongu means in Sangam Tamil 'border'.A more appropriate meaning is honey or nectar of flowers as the Kongu country had vast stretches of forests

Dharapuram In Kongu Region


Dharapuram (also known as Rajarajapuram by the Tanjore Cholas), is a town and a municipality in theTirupur district of the South Indian state of Tamil Nadu. Dharapuram is one of the oldest towns in Tiruppur District. Dharapuram was the capital of Kongu Nadu under Kongu Cholas, at which time it was known asVanchipuri. The Amaravathi River flows through the city.

Dharapuram was part of the Chera kingdom until 850 A.D. From 1000 A.D. to 1275 A.D., the area was ruled by the Kongu Cholas who renamed Dharapuram Vanchipuri (also Viradapuram). The Cholan capital was under attack by a hitherto unknown group in South India, called Kalabhars, during Tamilakam. As a result, the Kongu Cholas made this their military and political headquarters. The Tanjore Cholas named the cityRajarajapuram. After 1276 A.D. the Pandyan empire took control of the region. The Pandyan ruler Veerapandian made Kongu chieftain Kalingarayar (which translates to "slayer of Kalinga King's head in battlefield"), the Prime minister of the Pandyan empire. During this period, this visionary dug the famous Kalingarayan Channel, which continues to irrigate the region.
The Viradapuram Raja built a fort in the heart of Vanchipuri. The Muslims (Modern Sulthans) ruled next, after which the Nayaks of Madurai ruled. They were followed by Hyder Ali and Tippu Sultan. In 1799, when Tippu fell to the British, the East Indian Company took over administration of this region. The British stationed their military camp in Therupatti on the Palani road, regularly practicing rifle firing in the Kannimar Hills. The ancient foundry of the Chera, Kongu Nadu (Kollan Pattari), is also found in the same village.
Dharapuram and Coimbatore gained the status of Municipality on the same day. Dharapuram Municipality was promoted to first grade municipality on May 6, 1983. Dharapuram Town is situated along 9.62 km2 of the bank of River Amaravathi. Under British control, Dharapuram was the capital of South Noyyal District, and Bhavani was the capital of North Noyyal District. Now Tiruppur district has taken the leadership role
The Viradapuram Raja built a fort in the heart of Vanchipuri. The Muslims (Modern Sulthans) ruled next, after which the Nayaks of Madurai ruled. They were followed by Hyder Ali and Tippu Sultan. In 1799, when Tippu fell to the British, the East Indian Company took over administration of this region. The British stationed their military camp in Therupatti on the Palani road, regularly practicing rifle firing in the Kannimar Hills. The ancient foundry of the Chera, Kongu Nadu (Kollan Pattari), is also found in the same village.

Sunday, October 21, 2012

Pugali Malai, Balasubramaniswamy Temple, Karur(Arunattan Mala)



The beautiful & very old(2500 years) hill temple for lord muruga is here.
It is in Kaveri river bank.
Velayuthampalayam is a town located in Karur District in the Indian state of Tamil Nadu. It comes under the jurisdiction of Punjai Pugalur Town Panchayat. This town is situated on the footsteps of Arunattan Malai, which houses Lord Muruga. The river Cauvery is 3 kilometers away from the town.It is very close to TNPL Pugalur.


This place is called Velayudhampalayam because of this temple. Lord Muruga has a weapon in his hand always which is called a Vel. Ayudham means weapon. So that is Velayudhampalayam. This place is also called Arnattan Malai, which mean it’s a natural hillock and not man made. This is also manipulated as Arunattan Malai which means the hillock which belongs to the 6 regions i.e this was centrally located to 6 regions. Other names for the place are Pugazhimalai, Pugazhiyur and Pugazhur.

I enquired the priest here about the Tamil Brahmi Script and he said it is locked up and the key is with the security guy who would be at the base of the hillock. Then he also said that the key might be with his bro who was the priest at the nearbyMariamman temple. No other go, I went down to find this security guy who was missing. So I went to the Mariamman Templewhere the priest helped me out and I was back at the hillock. At this point my sweet friend who I failed to wake up in the morning called me up to say he was down with fever. Poor soul!!!

The gate to go to the caves is located near the Idumban Shrine. I was accompanied by the priest of Balasubramaniar Temple and we were there in the pathway that leads to the caves.

There are actually 2 caves and 4 gates. Heavy security to preserve our heritage!!! Passing through the first 2 gates took me to the first cave where first cave.

Enroute was this interesting tree here from atop which had its roots through the rocks and finally hanging atop my head!!!

Did I tell you these caves also had Jain Beds.? Samana Padukkaigal as it is called in Tamizh, these are flat surfaces chiseled out by the Jain Monks who resided here in the 1st & 2nd C AD. These were flat surfaces sculpted out of the rocks with an elevated portion for the head like a pillow. So creative, isn’t it.? Also are some little ridges carved out. These might have been used to light up lamps with oil and some cotton fabric.

Here was the first set of inscriptions. So brainy they are to create a little ridging of the rock all through its length and then inscribing their wordings. This ridging has helped the inscriptions to survive the harsh rains.

From there the third gate. Now the route is hardly little enough to hold a person. There was the second set of inscriptions.

Sunday, October 14, 2012

Karur In kongu region



Karur was built on the banks of River Amaravathi which was called Aanporunai during the Sangam days. The names of the early Chera kings who ruled from Karur, have been found in the rock inscriptions in Aru Nattar Malai close to Karur. The Tamil epic Silapathikaram mentions that the famous Chera KingSenguttuvan ruled from Karur. In 150 AD Greek scholar Ptolemy mentioned Korevora (Karur) as a very famous inland trading center in Tamil Nadu.

[edit]Rulers of Karur

Karur may have been the center for old jewellery-making and gem setting (with the gold imported mainly from Rome), as seen from various excavations. According to the Hindu mythology, Brahma began the work of creation here, which is referred to as the "place of the sacred cow."

The Pasupatheesvarar Temple sung by Thirugnana Sambhandar, in Karur was built by the Chola kings in the 7th century. Karur is one of the oldest towns in Tamil Nadu and has played a very significant role in the history and culture of the Tamils. Its history dates back over 2000 years, and has been a flourishing trading center even in the early Sangam days. It was ruled by the Cheras, Gangas, Cholas, the Vijayanagara Nayaks, Mysore and the British successively. Epigraphical, numismatic, archaeological and literary evidence have proved beyond doubt that Karur was the capital of early Chera kings of Sangam age. And Kongunadu is only the Chera Kingdom that extended up to the western coast till Muziri in Kerala, South India when the empire was at its peak and which the Cheras made it as their main port city. The Chera Kings and Kongudesa Rajakkal were one and the same. In olden days it was called Karuvoor or Vanchi or Vanji during Sangam days. There has been a plethora of rare findings during the archaeological excavations undertaken in Karur. These include mat-designed pottery, bricks, mud-toys, Roman coins, Chera Coins, Pallava Coins, Roman Amphorae, Rasset coated ware, rare rings, etc.
Karuvoor Thevar born in Karur, is one among the nine devotees who sung the divine Music Thiruvichaippa, which is the ninth Thirumurai. He is the single largest composer among the nine authors of Thiruvichaippa. He lived during the reign of the great Rajaraja Chola-I. In addition to the famous Siva Temple., there is a Vishnu Temple at Thiruvithuvakkodu suburb of Karur, sung by famous Kulasekara Alwar, 7th century AD, who was the ruler of Kongu nadu. The same Temple is presumably mentioned in epic Silappadikaram as Adaha maadam Ranganathar whose blessings Cheran Senguttuvan sought before his north Indian expedition.[1]
Later the Nayakars followed by Tipu Sultan also ruled Karur. The British added Karur to their possessions after destroying the Karur Fort during their war against Tipu Sultan in 1783. There is a memorial at Rayanur near Karur for the warriors who lost their lives in the fight against the British in the Anglo-Mysore Wars. Thereafter Karur became part of British India and was first part of Coimbatore District and later Tiruchirappalli District.
Karur is also a part of Kongu Nadu. The history of Kongu nadu dates back to the 8th century. The name Kongunadu originated from the term "Kongu", meaning nectar or honey. Kongu came to be called as Kongu nadu with the growth of civilization. The ancient Kongunadu country was made up of various districts and taluks which are currently known as Palani, Dharapuram, Karur, Nammakkal, Thiruchengodu, Erode, Salem, Dharmapuri, Satyamangalam, Nilgiris, Avinashi, Coimbatore, Pollachi and Udumalpet.

[edit]Chera Rulers

Karur was ruled by different Chera kings. Kongu Cheras (capital:Karur (Vanji), ruling nearly the whole of old Kongu - lineage unclear- Cheran kootam)

Kodumanal in Kongu Region



Kodumanal was a 2,500-year-old industrial estate discovered in Kongu Nadu. KonguNadu is the most industrialised and prosperous region in Tamil Nadu.
Kodumanal is a village located in the Erode district in the southern Indian state of Tamil Nadu. It was once a flourishing ancient trade city known as Kodumanam, as inscribed in Patittrupathu of Sangam Literature.The place is a important Archaeological Site, under the control of State Archaeological Department of Tamil Nadu. It is Located on the northern banks of Noyyal River, a tributary of the Cauvery.
The city played a major role in Indo-Roman trade and relations, as the ancient city is located on the mid-way of a Roman Trade Route, linking Muziris Port i.e. Pattanam on the Malabar Coast with the Kaveripoompattinam (Puhar) Port in the Coromandel Coas.
Kodumanal, celebrated in Tamil Sangam literature (datable from the second century BCE to the second century C.E.), is now one of the most explored sites in India. The Sangam work Pathitruppatthu refers to Kodumanal as Kodumanam in two places. While the poet Kabilar refers to it as “Kodumanam patta… nankalam”, another poet, Arisil Kizhar, celebrates it as “Kodumanam patta vinaimaan arunkalam”, that is, Kodumanam, the place where rare jewels are made. A horizontally excavated site, Kodumanal has yielded the highest number of inscribed potsherds (about 315 potsherds with Tamil-Brahmi inscriptions) and also the largest number of exposed graves for any single archaeological site in India.

http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=20120810291506200.htm&date=fl2915/&prd=fline&



Tuesday, October 2, 2012

Kongu Vellalar Survey


Hi , Please Take a survey
click on Kongu Vellalar Survey


Please click above link  & submit your temple details if your  temple not listed










Click here to submit

Kongu Vellalar Survey

Tuesday, August 7, 2012

Ezhudhingam

 Hi , Please Take a survey
click on Kongu Vellalar Survey

Ezhudhingam

எழுதிங்கள்சீர்
கொங்கு வெள்ளாளர் இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை பெரியவளாகி ருதுவாவதற்கு முன் அப்பெண்ணிற்கு அவள் தகப்பன்-தாய் வீட்டீல் செய்யும் சீர்தான் எழுதிங்கள்சீர். கொங்கு வெள்ளாளர் இனத்தில் இது ஒரு திருமண நிகழ்ச்சி போல் நடைபெரும். திருமணம் போல அனைத்து சொந்தகாரர்களையும் நேரில் சென்று அழைப்பர். குறித்த நல்ல நாளில் மாலை நல்ல நேரத்தில் உறவினர்சூழ அருமைக்காரர் முகூர்த்தகால் நடுவார். பின்வரும் சடங்குகள் எழுதிங்கள்சீர் பாட்டாக…
  1. கற்பு குலையாத காராள வம்சம்
  2. வேற்பு குலையாத வேளாளர் வம்சம்
  3. காப்பு குலையாத கவுண்டர்கள் வம்சம்
  4. காராள குலதிலகர் கவுண்டர்கள் வம்சம்
  5. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் வம்சம்
  6. ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி
  7. பட்டி மரவு
  8. எலந்த மரம் குடை மரவு
  9. நுகம்
  10. கொலுவு
  11. குழவி லிங்கம்
  12. உரல் லிங்கம்
  13. அம்மி
  14. நிறைக்குடம்
  15. புடைச்சட்டி
  16. வாணைச்சட்டி
  17. பிறந்தான் பிறந்த மணைக்கு எழுதிங்கள்சீர் செய்ய பிறந்தாளை ஊரிலிருந்து அழைத்துவர
  18. புது துணி எடுத்து விரத விருந்து வைத்து
  19. வெள்ளைமாத்தில் எழுகுடம் வைக்க எழுதிங்கள்காரிகள் அருமைக்காரருடன் ஏழு கிணற்றிலிருந்து சீர்தண்ணீர் கொண்டு வந்து
  20. வெள்ளைமாத்தில் வைத்து, கங்கணம் கட்டி, மூன்று முறை அரிசி போட்டு  கணபதி பூசை செய்து
  21. உரல், நுகம் அம்மி குழவி புடைச்சட்டி வாணைச்சட்டி பூசை செய்து
  22. பாலக்கால் வெட்டி வந்து முகூர்த்தகால் நட்டு
  23. வாசல் தொளித்து வண்ண கோலமிட்டு செம்மண் சுண்ணாம்பினால் சீராக கரைகட்டி
  24. எழுதிங்கள்காரிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து
  25. ஐந்துபடி திணை மாவில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து, இருகூராக்கி, இடையில் ஆச்சுவெல்லமிட்டு மாவால் நன்கு மூடி, ஆரச இலையிலிட்டு,
  26. மூன்று படி தண்ணீர் விடு, குறுக்கே குச்சி வைத்து, கோதை மாவை மூழ்காமல் புதுப் புடைச்சட்டில் வைத்து
  27. பிறந்தான் புடைச்சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து, கோதைமாவை வேகவிட
  28. எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, அரூமை பெரியவர் அருகுமணம் எடுக்க
  29. எழுதிங்கள்காரியை மரஉரல் முன் நிறுத்தி, எலந்தமுள் குடையை உடன்பிறந்தான் தான் பிடிக்க
  30. நல்ல நாவிதன் கொழுமுனையை காய்ச்சி, எழுதிங்கள்காரி முன்வைத்து சுட சுட மோர்விட
  31. எழுதிங்கள்காரி உரலை உதைத்து தள்ளி வீட்டினுள் சென்று அமர
  32. நங்கை கொழுந்தியாள் குழவிகல் எடுத்து வந்து எழுதிங்கள்காரியின் மடியிலிட
  33. எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, பட்டிமாவு பந்தலில் நுகத்தருகே ஒருசிந்திவிட (விரத விருந்து வைத்தல்)
  34. வீட்டு வாசல் நிலவுமேல் பேழை கூடையில் கோதைமாவை வைக்க, கோடாரியில் துணி சுற்றி அறுமை பெரியவருடன் சீர்காரி கோதையை பிளக்க, சீர் வெல்லம் குழையாமல் முழுதாக இருக்க நல்லதென்பார்.
  35. பின், சீர்காரி படி சாதம் பானையில் சமைத்து உறவினற்கு பரிமாறி, கோதை மாவுடன் ஒருசிந்திவிட்டு (விரத விருந்து வைத்தல்) கணபதி பூசை செய்து பெரியவரை வணங்கியதுடன் எழுதிங்கள் சீர் இனிதே முடிந்தது.
எழுதிங்கள் சீருக்காகும் செலவுகள் அனைத்தும் தாய் வீட்டாரே செய்வர். சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள்.
கொங்குவேள்ளாளர்களில் எழுதிங்கம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள்.

Mangala Vaazhthu Song

 Hi , Please Take a survey
click on Kongu Vellalar Survey

Mangala Vaazhthu Song

‘Mangala vaazhthu’ song:
The great Tamil Poet Kavisakaravarthi Kamar is the author of this Mangala Vaazhthu. The mangala vaazhthu song, which is, recited only in kongu Vellalar marriages. This song explains in detail and in sequence all the events related to a marriage from the beginning to the end. The song has been written in such a way that it describes the marriage events in a grand manner as if it is taking place in a king’s family. The Status, life, style, culture, and nature of society and relationship of Kongu Vellalar are very well brought out by the above song. The mangala Vaazhthu song is qualified to be spoken literature.
The art of marriage Kongu Vellalar strives their best to lead a successful and prosperous domestic life after marriage.
Kambar Mangala Vazhthu (MP3 Song); (kvg-mangalaVazhthu - zip)


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய மங்கல வாழ்த்து வாழி

விநாயகர் காப்பு
நல்ல கணபதியை நாம்காலமே தொழுதால்
அல்லல் வினையெல்லாம் அகலுமே, சொல்லரிய
தும்பிக்கை யானைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை யுண்டே நமக்கு
வாழ்த்து பாடல்
  1. அலைகடல் அமிழ்தம் ஆரணப் பெரியவர்
  2. திங்கள் மும்மாரி செல்வஞ் சிறந்திட
  3. கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
  4. சந்திரர் சூரியர் தானவர் வானவர்
  5. முந்திய தேவர் மூவருங் காத்திட
  6. நற்கலி யாணம் நடத்திடும் சீர்தனில்
  7. தப்பித மில்லாமல் சரஸ்வதி காப்பாய்!
  8. சீரிய தினைமா தேனுடன் கனிமா
  9. பாரிய கதலிப் பழமுடனே இளநீர்
  10. சக்கரை வெல்லம் தனிப்பலாச் சுளையும்
  11. மிக்கத்தோர் கரும்பு விதவிதக் கிழங்கு
  12. எள்அவல் நற்பொரி இனித்த பாகுடனே
  13. பொங்கல் சாதம் பொரிகறி முதலாய்
  14. செங்கை யினாலே திரட்டிப் பிசைந்து
  15. ஆரமுது அருந்தும் அழகு சிறந்த
  16. பேழை வயிற்றுப் பிள்ளைக்கணபதியை
  17. அடியேன் சொல்லை அவனியில் குறித்துக்
  18. கடுகியே வந்தென் கருத்தினில் நின்று
  19. நினைத்த தெல்லாம் நீயே முடித்து
  20. மனத்துயர் தீர்ப்பாய் மதகரி சரணம்!
  21. மங்கல வாழ்த்தை மகிழ்ந்து ஓத
  22. என்குரு நாதன் இணையடி போற்றி
  23. கிரேதா திரேதா துவாபரம் கலியுகம்
  24. செம்பொன் மகுடம் சேரன் சோழன்
  25. பைம்பொன் முடியும் பாண்டியன் என்னும்
  26. மூன்று மன்னர் நாட்டை ஆளுகையில்
  27. கருவுரு வாகித் திருவதி அவள்புகழ்
  28. நிறந்த மானிடம் தாயது கருப்பம்
  29. வாழ்வது பொருந்தி வளமாய் நலமாய்
  30. செம்மை யுடனே சிறந்திடுங் காலம்
  31. இந்திரன் தன்னால் இங்குவந்த நாளில்
  32. பக்குவ மாகிப் பருவங் கண்டு
  33. திக்கில் உள்ளோர் சிலருங் கூடி
  34. வேதியன் பக்கம் விரைவுடன் சென்று
  35. சோதிடரை அழைத்துச் சாத்திரங் கேட்டு
  36. இந்தமாப் பிள்ளை பேர்தனைச் சொல்லி
  37. இந்த பொண்ணின் பேர்தனைச் சொல்லி
  38. இருவர் பேரையும் ராசியில் கேட்டுக்
  39. கையில் ஓடிய ரேகைப் பொருத்தம்
  40. ஒன்பது பொருத்தம் உண்டாவெனப் பார்த்துத்
  41. தாலிப் பொருத்தம் தவறாமல் கேட்டு
  42. வாசல் கௌலி வலிதென நிமித்தம்
  43. தெளிவுடன் கேட்டுச் சிறியதோர் பெரியோர்
  44. குறிப்புச் சொல்லும் குறிப்பையும் கேட்டு
  45. உத்தம பாக்கியம் தச்சனைக் கேட்டு
  46. பொருந்தி இருத்தலால் பூரித்து மகிழ்ந்து
  47. சிலபேருடனே சீக்கிரம் புறப்பட்டு
  48. மச்சினன் ஊருக்கு வண்டியில் சென்று
  49. வெண்கல முரசு வீதியில் கொட்டத்
  50. தங்க நகரி தானாயலங் கரித்து
  51. முத்துக்கள் தன்னை முசம்பரங் கொட்டி
  52. சித்திரக் கூடம் சிறக்கவே விளக்கி
  53. உரியவர் வந்தார் உன்மகளுக் கென்றே
  54. பிரியமுடன் வெற்றிலை மடிதனில் கட்டி
  55. நாளது குறித்து நல்விருந் துண்டு
  56. பூட்டு தாலிக்குப் பொன்னது கொடுத்து
  57. வாழ்வது மனைக்கு மகிழ வந்துமே
  58. கற்றோர் புலவர் கணக்கரை அழைத்து
  59. தேன்பனை யோலை சிறக்கவே வாரி
  60. திசைதிசை எங்கும் தென்னவர் அனுப்பி
  61. கலியாண நாளைக் கணித்து அறிவித்தார்
  62. வாழை கமுகு மகமே ருடன்
  63. சோலை இலையால் தோரணங்கட்டி
  64. மூத்தோர் வந்து மொழுகி வழித்துப்
  65. பார்க்குமிட மெங்கும் பால்தனைத் தெளித்து
  66. பெண்டுகள் வழங்கும் பெரிய கலத்தைத்
  67. கொண்டு வந்ததனைக் குணமுடன் விளக்கி
  68. நேரிய சம்பா அரிசியை நிறைத்துப்
  69. பாரிய வெல்லம் பாக்கு வெற்றிலை
  70. சீருடன் நெய்யும் தேங்காய் பழமும்
  71. வாரியே வைத்து வரிசை குறையாமல்
  72. முறைமை யதாக முக்காலிமேல் வைத்து
  73. மணம் பொருந்திய மாப்பிள்ளை தனக்குக்
  74. குணம் பொருந்திய குடிமகன் அழைத்து
  75. போன மச்சம் முகமது துடைத்து
  76. எழிலான கூந்தலுக்கு எண்ணை தனையிட்டு
  77. குணமது சிகைக்காய் கூந்தலில் தேய்த்துமே
  78. ஏழு தீர்த்தம் இன்பமுடன் விட்டு
  79. மேழமுடனே விளாவிய வார்த்து
  80. செந்நெற் சோற்றால் சீக்கடை கழித்து
  81. வண்ணப்பட்டாடை வஸ்திரந் தன்னை
  82. நெருங்கக் கொய்து நேர்த்தியாய் உடுத்தி
  83. அன்னமும் முப்பழம் ஆவின் பாலும்
  84. மன்னவர் முன்னே வந்தவருடனே
  85. வாசல் கிளறி மதிப்புடன் கூட்டி
  86. சாணங் கொண்டு தரைதனை மெழுகி
  87. கணபதி உன்றைக் கருத்துடன் நாட்டி
  88. அருகது சூட்டி அருள் பொருந்திடவே
  89. நிறமிய தாகவே நிறைநாழி வைத்து
  90. வெற்றிலை பழமும் விருப்பமுடன் வைத்து
  91. அலைகடல் அமிழ்தம் அவணியில் நீரும்
  92. குழவிக்குக் கங்கணம் குணமுடன் தரித்து
  93. களரியோர் மெச்சிடக் காப்பது கட்டி
  94. குப்பாரி கொட்டிக் குலதேவதை அழைத்து
  95. செப்பமுடன் மன்னவர்க்கு திருநீரு அணிந்து
  96. சாந்து  சந்தனம் தான்பன் னீரும்
  97. சேர்த்துக் கலக்கிச் சிறக்கவே பூசி
  98. கொத்தரளி கொடியரளி கோத்திரத்து நல்லரளி
  99. முல்லை இருவாச்சி முனைமுறியாச் செண்பகப்பூ
  100. நாருங் கொழுந்தும் நந்தியா வட்டமும்
  101. வேருங் கொழுந்தும் வில்வ பத்திரமும்
  102. மருவும் மரிக்கொழுந்தும் வாடாத புட்பங்களும்
  103. புன்னை கொன்னை பூக்கள்எல்லாம் கொண்டுவந்து
  104. தண்டைமாலை கொண்டைமாலை சோபனமாலை
  105. சுடர்மாலை ஆடை ஆபரணம் அலங்காரம்
  106. திடமாய் மிகச்செய்து திட்டமுடன் பேழைதனில்
  107. சோறு நிறையுடன் நிறைநாழி வைத்து
  108. நட்டுமுட்டுத் தான்முழங்க நாட்டார் சபைதனக்கு
  109. நன்றாய் வலம்வந்து நலமதாய் நிற்கையிலே
  110. செந்சோறு ஐந்துஇடை சிரமத்தைச் சுற்றி
  111. திருஷ்டி கழித்துச் சிவசூரியனைக் கைதொழுது
  112. அட்டியெங்கும் செய்யாமல் அழகு மனைக்குவந்து
  113. மணவறை அலங்கரித்து மன்னவரைத் தானர்த்தி
  114. இணையான தங்கையரை ஏந்திழையைத் தானழைத்து
  115. சந்தனம் புணுகு சவ்வாது மிகப்பூசி
  116. மந்தாரை மல்லிகை மருக்கொழுந்து மாலையிட்டு
  117. ஆடை ஆபரணம் அழகுறத்தான் பூண்டு
  118. கூறை மடித்துவைத்துக் குணமுள்ள தங்கையரும்
  119. பேழைமூடி தான்சுமந்து பிறந்தவரை சுற்றிவந்து
  120. பேழையை இறக்கிவைத்து பிறந்தவளை அதில்நிறுத்தி
  121. கூறைசேலை ஒருதலைப்பை கொப்பனையாள் கைப்பிடித்து
  122. மாப்பிள்ளை கக்கத்தில் மறுமுனைதான் கொடுத்து
  123. அருமைபெரியார் அழகு மாப்பிள்ளை கையை
  124. அரிசியில் பதியவைத்து அங்கரன் பூசைசெய்து
  125. மங்கல வாழ்த்துகூற மணவறையில் குடிமகனுக்கு
  126. செங்கையால் அரிசியள்ளி சிறக்கக் கொடுத்திடுவார்
  127. குடிமகன் மங்கலவாழி கூறி முடித்தவுடன்
  128. வேழமுகத்து விநாயகரின் தாள் பணிந்து
  129. சந்திரரும் சூரியரும் சபையோர்கள் தானறிய
  130. இந்திரனார் தங்கை இணையோங்க வந்தபின்பு
  131. அடைக்காயும் வெற்றிலையும் அடிமடியிற் கட்டியபின்
  132. முன்னர் ஒருமுறை விநாயகருக்கு இணைநோக்கி
  133. பின்னர் ஒருமுறை பிறந்தவர்க்கு இணைநோக்கி
  134. இந்திரனார் தங்கைக்கு இணைநோக்கி நின்றபின்பு
  135. தேங்காய் முகூர்த்தமிட்டுச் செல்வ விநாயகனைப்
  136. பாங்காய் கைதொழுது பாரிகொள்ளப் போரோமென்று
  137. மாதாவுடன் மகனாரும் வந்திறங்கி
  138. போதவே பால்வார்த்துப் போசனமும் தானருந்தி
  139. தாயாருடன் பாதம் தலைகுனிந்து தெண்டனிடப்
  140. போய்வாமகனே என்றாள் பூங்கொடிக்கு மாலையிடப்
  141. பயணமென்று முரசுகொட்டப் பாரிலுள்ள மன்னவர்கள்
  142. மதகரி அலங்கரித்து மன்னவர்கள் ஏறிவர
  143. தந்தை யானவர் தண்டிகை மேல்வர
  144. தமையன் ஆனவர் யானையின் மேல்வர
  145. நாடியே வந்தவர்கள் நட்சத்திரம் போலவர
  146. தேடியே வந்தவர்கள் தேரரசர் போலவர
  147. பேரணி முழங்க பெரிய நகாரடிக்க
  148. பூமிதான் அதிர புல்லாங்குழால் ஊத
  149. எக்காளஞ் சின்னம் இடிமுரசு பெரியமேளம்
  150. கைத்தாளப் பம்பை கனகதப்பட்டைதான் முழங்க
  151. துத்தாரி நாதசுரம் சோடிகொம்பு தானூத
  152. சேகண்டி சங்குதிமிர்த்தாள பம்பையுமே
  153. வலம்புரிச் சங்கு வகையாய் ஊதிவர
  154. உருமேளம் பறைமேளம் உரம்பை திடும் அடிக்க
  155. பலபல விதமான பக்கவாத்தியம் முழங்க
  156. பல்லாக்கு முன்னடக்க பரிசுகள் பறந்துவர
  157. வெள்ளைக்குடை வெண்சாமரம் வீதியில் வீசிவர
  158. சுருட்டிய சூரியவாணம் தீவட்டி முன்னடக்க
  159. இடக்கை வலக்கை இனத்தார் சூழ்ந்துவர
  160. குதிரையின் மீதமர்ந்து குணமுள்ள மாப்பிள்ளைதான்
  161. சேனைகள் முன்னே சிறந்து முன்னடக்க
  162. கட்டியங்கள் கூறி கவிவாணர் பாடிவர
  163. நாட்டியங்கள் ஆடிவந்தாள் நல்ல தெய்வடியாள்
  164. பாகமாஞ்சீ லைப்பந்தம் பிடித்திட
  165. மேகவண்ணச் சேலை மின்னல்போல் மின்ன
  166. அடியாள் ஆயிரம்பேர் ஆலத்தி ஏந்திவர
  167. பெண் வீட்டார்கள் பிரியமுடன் எதிர்வந்து
  168. மன்னவ ர்தங்களை வாருங்கள் என்றழைத்து
  169. வெகு சனத்துடனே விடுதியில் விட்டு வந்தார்
  170. வாழ்வரசி மங்கைக்கு வரிசை அனுப்புவோம் என்று
  171. நாழியரிசிக் கூடை நன்றாகமுன் அனுப்பி
  172. பொன்பூட்டப் போகிறவர் பேடை மயிலிற்கு
  173. நல்ல முகூர்த்தம் நலமமுடன் தான்பார்த்து
  174. பெட்டிகளும் பேழைகளும் பொன்னும் சீப்பும்
  175. பட்டுத்துணி நகையும் பார்க்கக் கண்ணாடியும்
  176. சத்துச் சரப்பணி தங்கம்பொன் வெள்ளிநகை
  177. முத்துச் சரப்பணி மோகன மாலைகளும்
  178. திட்டமுடன் மங்கையர்க்கு திருப்பூட்டப் போவோம் என்று
  179. அட்டதிக்கும் தானதிர அடியுமென்றார் பேரிகையை
  180. அன்னநடையாரும் அருமைப் பெரியவரும்
  181. பொன் வளையல்கையால் பேழைமுடிதான் சுமந்து
  182. இன்னும் சிலபெண்கள் இவர்களையே சூழ்ந்துவர
  183. சென்று உட்புகுந்தார் திருப்பெண்ணாள் மாளிகையில்
  184. நாட்டில் உள்ளசீர்சிறப்பு நாங்கள் கொண்டு வந்தோம்என்று
  185. கொண்டுவந்த அணிகலனைக் கோதையருக்கு முன்வைக்க
  186. கண்டு மகிழ்ந்தார்கள் கன்னயர்கள் எல்லேரும்
  187. பூட்டினார் தோடெடுத்து பொன்னாள் திருக்காதில்
  188. தங்கச் சங்கிலிதனை தான்கழுத்தில் இட்டார்கள்
  189. அடைக்காயும் வெற்றிலையும் அன்பாக மடியில்கட்டி
  190. ஆனிப் பெண்ணவளை அலங்கரித்துக் குலம்கோதி
  191. சாந்துப் பொட்டிட்டு சவ்வாது மிகபூசி
  192. ஊட்டுமென்றார் சாதம் உடுத்துமென்றார் பட்டாடை
  193. பொன்பூட்டவந்தவர்க்குப் பூதக்கலம்தான் படைத்து
  194. அன்பாக வெற்றிலை அடைக்காயும்தான் கொடுத்தார்
  195. தாய்மாமன் தன்னை தன்மையுடனே அழைத்து
  196. சந்தனம் மிகபூசி சரிகைவேட்டிதான் கொடுத்து
  197. பொட்டிட்டுப் பொன் முடித்து பேடைமயிலிற்குப்
  198. பட்டமும் கட்டினார் பாரிலுள்ளோர்தானறிய
  199. ஆரணங்குப் பெண்ணை அலங்காரம் மிகச்செய்து
  200. மாமன் குடைபிடித்து மாநாட்டார்சபைக்கு வந்து
  201. வலமதாய் வந்து நலமதாய் நின்று
  202. செஞ்சோறு ஐந்து அடைசிரம்கால் தோளில்வைத்து
  203. நிறைநாழி சுற்றியே நீக்கித் திட்டிகழித்து
  204. அட்டியங்கள் செய்யாமல் அழகுமனைக்கு வந்து
  205. மங்களகல்யாணம் செய்ய மணவறை அலங்கரித்து
  206. அத்தி எழுதப்பட்டு அனந்த நாராயணப்பட்டு
  207. பஞ்சவண்ண நிறச்சேலை பவளவண்ணக் கண்டாங்கி
  208. மாந்துளிர் சேர்பூங்கொத்து வண்ணமுள்ளப் பட்டாடை
  209. மேலான வெள்ளைப்பட்டு மேற்கட்டுங்கட்டி
  210. கட்டியே இருக்கும்கனப் பெரிய வாசலிலே
  211. அருமையுள்ள வாசலிலே அனைவரும் வந்திறங்கிப்
  212. பெருமையுள்ள வாசல்தனைப் பூவால் அலங்கரித்து
  213. சேரசோழ ராசாக்கள் சேர்ந்திருக்கும் வாசலிலே
  214. செம்பொன் மிகுந்தோர்கள் சிறந்திருக்கும் வாசலிலே
  215. வீரஇலக்குமி விளங்கிடும் வாசலிலே
  216. விருதுகள் வழங்கிடும் வளமான வாசலிலே
  217. தரணியின் அன்னக்கொடி தழைத்திருக்கும் வாசலிலே
  218. பன்னீராயிரம்பேர் பலர்சேர்ந்த வாசலிலே
  219. நாற்கரசு நாட்டி நல்ல முகூர்த்தமிட்டு
  220. பேய்கரும்பை நாட்டிப் பிறைமண்ணும்தான் போட்டு
  221. சாலுங் கரகமும் சந்திர சூரியரும்
  222. அம்மி வலமாக அரசாணி முன்பாக
  223. ஆயிரப் பெருந்திரி அதுவும் வலமாக
  224. சுத்தமுடன் கலம்விளக்கிச் சோறரிசி பால்பழமும்
  225. பத்தியுடன் இதனையும் பாரித்தார் மணவறையில்
  226. மணவறை அலங்கரித்து மணவாளனை இருத்தி
  227. அழகுள்ள பெண்ணை அலங்காரம் மிகச்செய்து
  228. மாமன் எடுத்து மணவறையைச் சுற்றிவந்து
  229. மகிழ்ச்சியதுமீதுற வலதுபுறம் தானிருத்தி
  230. குலம் பெரியமன்னவர்கள் குவலயத்தார் சூழ்ந்திருக்க
  231. இராமன் இவரோ இலக்குமணன் இவரோ
  232. கண்ணன் இந்திரன் காமன் இவரோ
  233. அத்தை மகள்தனை அழகு செல்வியை
  234. முத்துரத்தினத்தை முக்காலிமேல் அமர்த்தி
  235. கணபதி முன்பாககட்டும் மாங்கலியம் வைத்து
  236. அருமை பெரியவர் அன்புடன் பூசைசெய்து
  237. மாப்பிள்ளை பெண்ணை மணவறையில் எதிர்நிறுத்தி
  238. கெட்டிமேளம் சங்கநாதம் கிடுகிடென்று சப்திக்க
  239. மாணிக்கம்போல் மாங்கல்யம் வைடுரியம்போல் திருப்பூட்டி
  240. ஆரம்தனைமாற்றிஅமர்ந்தபின்மணவறையில்
  241. மாப்பிள்ளைக்கு மைத்துனரை வாவென்று தானழைத்து
  242. கலம் பெரியஅரிசிதனில் கைகோர்வை தானுமிட்டு
  243. சிங்காரமான இந்த தெய்வச் சபைதனிலே
  244. கங்காகுலம் விளக்கக் கம்பர்சென்ன வாழ்த்துரையை
  245. மங்கலமும் கன்னி சொல்லவாத்தியம் எல்லாம்அடக்கி
  246. மறையோர் வேதம்சொல்ல மற்றவர் ஆசிகூற
  247. பிறைஆயிரம் தொழுது பிள்ளையாருக்குப் பூசைசெய்து
  248. அருமைப் பெரியோர் அருகுமணம் செய்தபின்பு
  249. கைக்குக் கட்டின கங்கணமும் தானவிழ்த்து
  250. தங்களுக்குத் தாங்கள் தாரைக்கோர் பொன்கொடுத்து
  251. உரியதோர் பாட்டன் இருவருட கைதனிலே
  252. தண்ணிர் ஊற்றியே தாரையும் வார்த்தபின்பு
  253. பிரியமுள்ள மணவறையை பின்னும் சுற்றிவந்து
  254. மங்கலக் கல்யாணம் வகையாய் முடிந்ததென்று
  255. செங்கையினாலே சிகப்பிட்டு இருவருக்கும்
  256. சாப்பாடு போசனம் சந்தோசமாய்ப் போட
  257. உண்டு பசியாறி உறவுமுறை எல்லோரும்
  258. கொண்டு வந்தபொன்முடிப்பைக் கொடுத்துச் செல்லுமென்றார்
  259. மண்டலத்தோர் எல்லோரும் மணப்பந்தலில் அமர்ந்து
  260. கல்யாணத்தார் தம்மை கருத்துடனே அழைத்து
  261. கண்ணாளர் தனையழத்து ப்பொன்னேட்டம் காணுமென்றார்
  262. இப்போது கண்ணாளர் அவ்விடமேதானிருந்து
  263. பணமது பார்த்து குணமது கழித்து
  264. கடலுவாகன் கருவூர் பணமும்
  265. வெள்ளைப் புள்ளடி வேற்றூர் நாணயம்
  266. சம்மன் கட்டி சாத்தூர் தேவன்
  267. உரிக்காசுப் பணம் உயர்ந்த தேவராயர்
  268. ஆண்மாடை பெண்மாடை அரியதோர் பொற்காசு
  269. ஒருமுழி முழிக்க ஒருமுழி பிதுங்க
  270. பலவகை நாணயமும் பாங்காய் தெரிந்து
  271. முன்னூறு பொன்னு முடிப்பொன்றாய் முடிந்தவுடன்
  272. பாட்டன் இருந்து பரியம் செலுத்தினார்
  273. பந்தல் கௌரி பாக்கியம் உறைக்க
  274. மச்சினன்மார்கள் மகிழ்ந்து சூழ்ந்து நிற்க
  275. சிற்றடிப் பெண்கள் சிறுசீர்கள் சுமந்துவர
  276. சந்தோசமாகித் தங்கமுடி மன்னவர்கள்
  277. பந்தச்சிலவு பலபேர்க்கும் ஈந்தார்கள்
  278. ஆடுவான் பாடுவான் ஆலாத்தியுட்பட
  279. நாடிவந்த பேர்களுக்கு நல்லமனதுடனே
  280. சகாயமென்ற பேர்களுக்கு தனிப்பணம்தான் கொடுத்து
  281. வாழிப் புலவருக்கு வரிசைதனைக் கொடுத்து
  282. திட்டமுள்ள பந்தலின் கீழ்வந்தநின்ற பேர்களுக்கு
  283. அரிசி அளந்தார்கள் அனைவருந்தானறிய
  284. கரகம் இறக்கிவைத்துக் கன்னி மணவாளனுக்கு
  285. புடவைதனைக் கொடுத்துப் பின்னுந்தலை முழுகி
  286. சட்டுவச்சாதம் பெண்தளிர்கரத்தால் மாப்பிள்ளைக்கு
  287. சாதம் பரிமாறி சாப்பிட்டு ஆனவுடன்
  288. பண்ணையத்து மாதிகனைப் பண்பாக தானழைத்து
  289. வில்லை மிதியடிகள் மிக்கவே தொட்டபின்பு
  290. காலும் வழங்கிக் கன்னிகையைத் தானழைத்து
  291. மஞ்சள் நீராடி மறுக்க இருஅழைப்பழைத்து
  292. மாமன்மார்களுக்கு மகத்தான விருந்து வைத்து
  293. மங்கள சோபனம் வகையாய் முடிந்தவுடன்
  294. மாமன் கொடுக்கும் வரிசைதனைக் கேளீர்
  295. துப்பட்டு சால்வை சோமன் உருமாலை
  296. பஞ்சவர்ணக் கண்டாங்கி பவளநிறப் பட்டுசேலை
  297. அத்தியடி துத்திப்பட்டு ஆனையடிக் கண்டாங்கி
  298. மேலான வெள்ளைப்பட்டு மேகவர்ணக் கண்டாங்கி
  299. இந்திர வர்ணப்பட்டு ஏகாந்த நீலவர்ணம்
  300. முறுக்கு வளையல்களும் முகமுள்ள கொலுசுகளும்
  301. பதக்கம் சரப்பணி பகட்டான காசுமாலை
  302. கட்டிலும் மெத்தையும் காளாங்கி தலையணையும்
  303. வட்டில் செம்பும் வழங்கும் சாமான்களும்
  304. காளை வண்டியும் கன்றுடன் பால்பசுவும்
  305. குதிரையுடன் பல்லாக்கு குறையாத பல்பண்டம்
  306. நிறையக் கொடுத்தார்கள் நேயத்தோர்தானறிய
வாழிப்பாட்டு
ஆதி கணேசன் அன்புடன் வாழி
வெற்றிவேல் கொண்ட வேலவர் வாழி
வாணி சரஸ்வதி மகிழ்வுடன் வாழி
எம் பெருமானின் இணையடி வாழி
பாரத தேசம் பண்புடன் வாழி
மாது உமையவள் மகிழ்வுடன் வாழி
முப்பத்து முக்கோடி தேவர்கள் வாழி
நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும் வாழி
மாப்பிள்ளை பெண்ணும் மகிழ்வுடன் வாழி
வேதம் ஓதிடும் வேதியர் வாழி
கொங்கு நாட்டுக் குடிகளும் வாழி
வாழியே யானும் மகிழ்வுடன் வாழி
என்குரு கம்பர் இணையடி வாழி
வையத்து மக்கள் மற்றவரும் வாழி
காராள குலதிலகர் கவுண்டர்கள் வாழி
வேளாளர் குலதிலகர் விவசாயரும் வாழி
இந்தபாட்டுக் கேட்டவர் எல்லோரும் வாழியே
ஆல்போல் தழைதழைத்து அருகுபோல் வேறூன்றி
மூங்கில்போல் கிளைகிளைத்து முசியாமல் வாழ்ந்திருக்க
-மங்கல வாழ்த்து வாழி முற்றிற்று-